தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்! - சேலம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

சேலத்தில் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் மூன்று தலைமுறையாக வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

முற்றுகையிட்ட மக்கள்
முற்றுகையிட்ட மக்கள்

By

Published : Jul 31, 2021, 5:30 PM IST

சேலம்: வெள்ளக்கல்பட்டி அடுத்த உடைந்த பாலம் பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவருகின்றனர். இந்நிலையில் இந்த இடம் வனத் துறைக்குச் சொந்தமானது என்று கூறி, அங்கு வசிப்போர் வீட்டை காலி செய்யுமாறு சேலம் மாவட்ட வனத் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு, எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதியில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இன்று (ஜூலை 31) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு கலைந்துசென்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில்
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பகுதியில் விவசாயம் பார்த்து வாழ்க்கை நடத்திவரும் தாங்கள் அங்கிருந்து வெளியேறினால் வேலையிழந்து வருமானமின்றி தவிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் அரசு அதே இடத்தில் தாங்கள் குடியிருக்க அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். மீறி அரசு எங்களை வெளியேற்ற முயன்றால் அனைவரும் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வோம் என அப்பகுதி பொதுமக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details