சேலம் அஸ்தம்பட்டி அருகே சின்ன திருப்பதி பகுதியில் கேசவன் என்பவர் பெயிண்ட் கடை நடத்திவருகின்றார். இந்தநிலையில் கடையில் பெயிண்ட் கலக்கும் இரண்டு இயந்திரங்களில் இன்று மாலை 7 மணி அளவில் கடை ஊழியர்கள் வெங்கடேசன், மணிகண்டன் ஆகியோர் பெயிண்ட் கலர் மாற்றுவதற்காக அதனை பயன்படுத்தியப்போது எதிர்பாராத விதமாக இயந்திரம் திடீரென தீப்பற்றியது.
இந்த தீ மளமளவென கடை முழுவதும் பரவி கடைக்குள் இருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான பெயிண்ட்கள் முழுவதும் தீயில் எரிந்து நாசமாயின தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை முழுவதும் அணைத்தனர்.