சேலத்தில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் சாந்தி கண்ணன், விஜயா, ராஜா, ராஜேந்திரன், மாரியப்பன் உள்ளிட்ட ஆறு பேர் போட்டியிட்டனர்.
இதில், இறுதி வாக்காளர் பட்டியலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆறுபேர் பெயர்களில் ராஜா என்பவரின் பெயர் இடம்பெறவில்லை என்பது, வாக்கு எண்ணிக்கை நாளன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வாக்குப் பதிவு முடிவுற்றும் வேட்பாளர் பெயர் இல்லாத காரணத்தால், வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நிறுத்தப்பட்டது.