இந்த முகாமில் ஓமலூர் பகுதி வாழ் மக்கள் தங்கள் உடல் நிலையை பரிசோதித்துக் கொண்டனர். முகாமில் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மூடப்பட்ட திரையரங்கில் இலவச மருத்துவ முகாம்! - ஓமலூர் திரையரங்கம்
சேலம்: ஓமலூர் திரையரங்கு ஒன்றில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
மூடப்பட்ட திரையரங்கம்
சேலம் அருகே உள்ள ஓமலூர் திரையரங்கு ஒன்றில், பொதுமக்கள் தங்களின் உடல் ஆரோக்கிய நிலையை கண்காணித்துக் கொள்ள, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
மேலும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகிய சித்த மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
இதுகுறித்து திரையரங்க உரிமையாளர் கூறுகையில், “கரோனா தடைக் காலத்தில் மூடப்பட்ட திரையரங்கில் இலவச மருத்துவ முகாமும் நடை பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.