தமிழ்நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சேலம் மாநகரின் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சேலம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகியப் பகுதிகளில் அரசு, தனியார் பேருந்துகளின் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சேலத்திலிருந்து அண்டை மாவட்டங்களான ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்ல முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துகள் இயக்கப்படாததால் அவதிப்பட்டனர்.