மேட்டூரில் இருந்து சேலம் மாநகர பகுதிக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. சேலம் ஐந்து ரோடு பகுதியில் செல்லும் இந்த குழாயில், உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பல லட்சம் லிட்டர் அளவிலான தண்ணீர் சாலையில் வடிந்து வீணாகிவருகிறது. மேலும், இந்த குழாய்க்கு மிக அருகில் கழிவு நீர் கால்வாய் ஓடுவதால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ராட்சத குழாயில் உடைப்பு - சாலையில் வீணாகும் குடிநீர்! - Water pipe damage
சேலம்: மேட்டூரிலிருந்து சேலம் மாநகர பகுதிக்கு குடிநீர் செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு சேலம் ஐந்து ரோடு பகுதி சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் வீணாகிறது.
இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சேலம் மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோடை வெயில் வாட்டி எடுப்பதால், பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யாததால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி சாக்கடையில் கலந்து வருகிறது. குடிநீர் பஞ்சம் சேலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் நிலையில், மேட்டூர் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வெள்ளம்போல் குடிநீர் பெருக்கெடுத்து ஓடுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.