தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமரின் வேஷ்டியை ஏலம் எடுத்த வியாபாரி! - சேலத்தை சேர்ந்த இரும்புக் கடை வியாபாரி

பிரதமர் மோடியின் திருவள்ளுவர் சிலை, பட்டு வேஷ்டியை சேலத்தை சேர்ந்த இரும்புக் கடை வியாபாரி ஏலத்தில் எடுத்துள்ளார்.

பிரதமரின் வேஷ்டியை ஏலம் எடுத்த வியாபாரி
பிரதமரின் வேஷ்டியை ஏலம் எடுத்த வியாபாரி

By

Published : Dec 6, 2022, 10:48 AM IST

Updated : Dec 6, 2022, 10:55 AM IST

சேலம்: பிரதமர் மோடி தனக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்களை ஆண்டுக்கு ஒருமுறை ஏல விற்பனை செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் தொகையினை பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்கிறார். பிரதமர் கலந்து கொள்ளும் பல்வேறு விழாக்களில் கிடைக்கும் பரிசுப் பொருட்கள் ஆன்லைன் முறையில் ஏலம் விடப்படுகிறது.

இதை நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏலத்தில் எடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த பழைய இரும்புக் கடை வியாபாரி கார்த்திகேயன், பிரதமருக்கு பரிசாக கிடைத்த திருவள்ளுவர் சிலையையும் பட்டு வேஷ்டியையும் 32 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

பிரதமரின் வேஷ்டியை ஏலம் எடுத்த வியாபாரி

ஏலத்தில் எடுக்கப்பட்ட பொருட்கள் கார்த்திகேயன் வீட்டுக்கு நேற்று (டிச.5) கொண்டு வந்து வழங்கப்பட்டது. திருவள்ளுவர் சிலை, பட்டு வேஷ்டியை பெற்றுக் கொண்ட அவர், பிரதமர் பயன்படுத்திய பொருட்கள் தனது வீட்டில் இருப்பது பெருமைக்குரியது என்றார்.

இதையும் படிங்க:'ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்' முதலமைச்சர்

Last Updated : Dec 6, 2022, 10:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details