முதலமைச்சர் உத்தரவின்படி கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகள், இதர சந்தைகளை விசாலமான இடங்களுக்கு இன்று முதல் இடமாற்றம் செய்யப்படுகிறன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகள் விசாலமான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சேலம் உழவர் சந்தைகள் இடமாற்றம் எடப்பாடியில் உள்ள உழவர் சந்தை எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்திலும், இளம்பிள்ளை உழவர் சந்தையானது இளம்பிள்ளை வார சந்தை பகுதிகளிலும், ஆத்தூர் உழவர் சந்தை ஆத்தூர் புதிய பேருந்து நிலைய வளாகத்திலும் இடமாற்றம் செய்யப்படுகிறது. இந்த இடமாற்றமானது நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
வரும் முன் காப்போம் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பொதுமக்கள் கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவிற்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு!