தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் வேட்புமனு தாக்கலுக்கு காலி குடங்களுடன் வந்த சுயேச்சை! - salem local body election nomination candidates

சேலம்: ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் காலி குடங்களுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

local body election
காலி குடங்களுடன் ஊர்வலம் வந்த சுயேச்சை

By

Published : Dec 14, 2019, 5:27 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. வருகின்ற 16ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், இன்று சனிக்கிழமையும் வேட்புமனுக்கள் பெறப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, மாநிலம் முழுவதும் இன்று வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்திலும் வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

இதனால், காலை முதலே அதிமுக வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என பலர் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர். நேற்றுவரை வெறிச்சோடி காணப்பட்ட அலுவலகங்கள் இன்று பரபரப்பாக காணப்பட்டன. இந்நிலையில், சேலத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட சுயேச்சை வேட்பாளர் வீரக்குமார், காலிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

காலி குடங்களுடன் ஊர்வலம் வந்த சுயேச்சை

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," சேலத்தாம்பட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லை. நான் ஊராட்சி ஒன்றிய தலைவரானதும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதோடு தமிழ்நாட்டின் சிறந்த ஊராட்சியாக உருவாக்க பாடுபடுவேன்" என்றார்.

இதையும் படிங்க: லோக் அதாலத் மூலம்11 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details