மாநிலத்தில் சென்னை உள்ளிட்ட கரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நிலையில் தற்போது சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.
மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 295 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக சேலம் மாநகராட்சி பகுதியில் 172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்து 766 ஆக அதிகரித்துள்ளது.