சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கூலமேட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுப் போட்டியை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்தார். முதலில் கோயில் காளைகள் களத்தில் இறக்கிவிடப்பட்டன. பின்னர், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த காளைகள் களமிறங்கி, துள்ளிக்குதித்து ஓடின. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 800 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
கூலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் - koolamedu jallikattu
சேலம்: ஆத்தூரை அடுத்த கூலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்தார்
salem
ஜல்லிக்கட்டைக் காண்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மருத்துவப் பரிசோதனை செய்தபிறகே வாடிவாசலுக்கு அனுப்பப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பழனியில் ஜல்லிக்கட்டு: 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு