சேலம் மாவட்டம் தாரமங்கலம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கைலாசநாதர் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயிலின் தெப்பக்குளத்தில், ஆண் சடலம் மிதந்துகொண்டிருப்பதைக் கண்ட பொதுமக்கள் தாரமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனே அங்குவிரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கைலாசநாதர் கோயில் தெப்பக்குளத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்பு - சேலம் மாவட்டச் செய்திகள்
சேலம்: தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தெப்பக்குளத்தில் மிதந்த ஆண் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
![கைலாசநாதர் கோயில் தெப்பக்குளத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்பு salem](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6118429-thumbnail-3x2-l.jpg)
salem
கைலாசநாதர் கோயில் குளம்
பின்னர் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவரின் பெயர் கோபி என்பதும் அவர் கொல்லப்பட்டி சாமியார் கடை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு இந்த தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.
இதையும் படிங்க:குறிச்சியில் குளத்தில் மிதந்த பெண் உடல் மீட்பு