சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் அளித்த பாலியல் தொந்தரவு புகாரில் மத்திய சிறை வார்டன்களான திருப்பத்தூர் மாவட்டம் கரியாம்பட்டி அருகே உள்ள நரியனேரியைச் சேர்ந்த அருண் (30), உத்தமசோழபுரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (31) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறை வார்டன்கள் பணியிடை நீக்கம் - Astampatti Police
சேலத்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த புகாரில் கைதான சிறை வார்டன்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
Etv Bharatசேலம் சிறையில் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - சிறை வார்டன்கள் பணியிடை நீக்கம்
இவர்கள் இருவரையும் அஸ்தம்பட்டி போலீஸார் ஆத்தூர் சிறையில் அடைத்தனர். இதனிடைய சிறை வார்டன்கள் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கையாக பணியிடை நீக்கம் செய்து, மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:வேலூர் கோட்டை அகழியில் ஆண் சடலம் மீட்பு