ஊரடங்கு தளர்வின்படி 34 வகையான வர்த்தக நிறுவனங்கள் செயல்பட தமிழ்நாடு அரசு நேற்றைய தினம் அனுமதியளித்தது.
இந்த நிலையில் சேலம் மாநகரம் முழுவதும் காலை முதலே டீக்கடைகள், அடுமனைகள் (பேக்கரி), உணவகங்கள் உள்ளிட்ட சிறு வணிக நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. இதனால் அனைத்துக் கடைகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
சேலம் மாநகரில் உள்ள ஐந்து சாலை, நான்கு சாலை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட நகரின் முக்கியச் சாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அதிகளவில் பயணித்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலைகளில் குவியும் மக்கள் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய முடியாமல் சேலம் மாநகர போக்குவரத்துக் காவல் துறையினர் திணறினர். மேலும் முகக்கவசம், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
இதையும் படிங்க:'மதுராந்தகத்தில் 90 விழுக்காடு கடைகள் திறப்பு' - ஹாயாக சுற்றித் திரியும் மக்கள்!