தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் செல்ஃபி எடுத்த இளைஞர்கள் : 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! - சேலம் பிறந்தநாள் கொண்டாட்டம் 10 இளைஞர்கள் மீது வழக்கு

சேலம்: அஸ்தம்பட்டியில் 144 தடை உத்தரவினை மீறி சாலையில் கூட்டமாக நின்று செல்ஃபி எடுத்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ஏழு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்துள்ளனர்.

salem vehicle  seize
salem vehicle seize

By

Published : Jun 20, 2020, 11:58 AM IST

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக திருமணங்கள், சுப நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட நபர்களுடன் மாவட்ட நிர்வாக அனுமதி பெற்றே நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் அஸ்தம்பட்டியில் வசித்துவரும் தீபக் என்பவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் தனது நண்பர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாட முடிவுசெய்து அவரின் வீட்டிலேயே கொண்டாடியுள்ளனர்.

தீபக், அவரது நண்பர்கள் வீட்டின் முன்பு சாலையில் வாகனங்களை நிறுத்தி அங்கு நின்று செல்ஃபி எடுத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகத் தெரிகிறது.

இது குறித்து அப்பகுதியினர் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த அஸ்தம்பட்டி காவல் துறையினர் அவர்களிடமிருந்து ஏழு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல்செய்தனர்.

தீபக், அவரது நண்பர்கள் மீது அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையும் படிங்க : லடாக் வன்முறை: தயார் நிலையில் இந்திய போர் விமானங்கள்!

ABOUT THE AUTHOR

...view details