ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29ஆம் தேதி உலக பக்கவாத தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பக்கவாதத்தைத் தடுத்தல், அதற்கான சிகிச்சையளித்தல் தொடர்பாக விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கில் சேலம் அரசு மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு யோகா நிகழ்வு நடைபெற்றது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு யோகா செய்தனர். இதனையடுத்து கல்லூரி மாணவிகளிடம் பக்கவாதத்தின் அறிகுறிகள், பக்கவாதம் வராமல் தடுக்கும் உணவுமுறைகள், உடற்பயிற்சிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.