தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ப்ளீஸ் சிஎம் என்ன எப்படியாவது காப்பாத்த முடியுமா? - சிறுமி கண்ணீர் மல்க கோரிக்கை - salem girl request to cm

இரண்டு கிட்னியும் செயலிழந்த நிலையில் தவிக்கும் சேலம் சிறுமி முதலமைச்சருக்கு வீடியோ மூலம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

salem-girl-tearful-request
salem-girl-tearful-request

By

Published : Sep 25, 2021, 8:06 PM IST

Updated : Sep 25, 2021, 10:57 PM IST

சேலம் :அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி ராஜநந்தினி. இவர்களுக்கு 14 வயதில் ஜனனி என்ற மகள் உள்ளார். பத்தாம் வகுப்பு படித்துவரும் இவர், சிலம்பாட்டம், ஸ்கேட்டிங், வில்வித்தை போன்ற போட்டிகளில் மாநில அளவில் பரிசுகளை பெற்றுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி ஜனனி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் சிறுமிக்கு இரண்டு கிட்னிகள் செயலிழந்து போனது தெரியவந்தது. இதனையடுத்து தாயார் ராஜ நந்தினி மகளுக்கு தனது ஒரு கிட்னியை தானமாக கொடுத்துள்ளார். ஆனால், அந்த கிட்னி 15 நாட்களுக்கு பிறகு செயலிழந்து போனது.

சிறுமியின் பெற்றோர்

மகளை விட்டு சென்ற தந்தை

பின்னர் என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போன தாய், இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உதவி செய்யுமாறு மனு கொடுத்திருந்தார். சிறுமிக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் இவர்கள் தங்கியுள்ளனர். இதனிடையே மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு விஜயகுமார் சென்றுவிட்டார். இந்த நிலையில் சிறுமி ஜனனி தனக்கு உதவி செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிறுமி கண்ணீர் மல்க கோரிக்கை

அதில், ”என்னுடைய அப்பா எங்களை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார். இரண்டு பேரையும் செத்துப் போங்கள் என கூறுகிறார். என்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை, மிகவும் பயமாக இருக்கிறது. படிக்க கூட முடியவில்லை.

இரண்டு ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறேன், வலி தாங்க முடியவில்லை. ப்ளீஸ் சிஎம் என்ன எப்படியாவது காப்பாத்த முடியுமா” என கண்ணீருடன் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் வழங்கப்படும் தங்கமகள் விருது என்னுடைய மகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. கடந்த முறை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்ததால் அதனை வாங்க இயலவில்லை.

தற்போது என்னுடைய மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் உயிருக்கு போராடும் மகளுக்கு தங்கமகள் விருதினை வழங்க வேண்டும் என்று தாய் ராஜநந்தினியும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க : ஸ்மூல் செயலி மூலம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது

Last Updated : Sep 25, 2021, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details