தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருந்துவமனை அலட்சியம்: தையல்களுடன் 50 கி.மீ., நடந்துச் செல்லும் அவலம்

சேலம்: அரசு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தராததால் 20க்கும் மேற்பட்ட தையல்களுடன் ஒருவர் 50 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்திற்கு நடந்து செல்கிறார்.

patient-went-out-walk-50km
patient-went-out-walk-50km

By

Published : May 28, 2020, 1:18 PM IST

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பஞ்சு காளிப்பட்டிப் புதூரைச் சேர்ந்தவர் நல்லதம்பி. அவர் குடும்ப பிரச்னை காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு தாக்கப்பட்டு படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலை மற்றும் முகத்தில் 20க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டார்.

அதையடுத்து மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு செல்ல அறுவுறுத்தினர். அவருடன் உறவினர் யாரும் வராததாலும், தனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தையல்கள் போட்டிருப்பதாகவும் கூறி வீட்டிற்கு செல்வதற்காக ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து தர மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வசதிக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அதனால் அவர் சொந்த ஊருக்குச் செல்ல வேறு வழி தெரியாமல், 50 கி.மீ. தொலைவில் உள்ள தனது கிராமத்திற்கு நடந்துச் செல்ல முடிவு செய்து மருத்துவமனையிலிருந்து கிளம்பியுள்ளார். போகும் வழியில் ஆங்காங்கே அமர்ந்தவாறு தனது கிராமத்தை நோக்கிச் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஆம்புலன்ஸ் வராததால் காத்திருந்த முதியவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details