தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் குறையும் கரோனா பாதிப்பு - அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

சேலம்: மாவட்டத்தில் முன்பு இருந்ததைவிட கரோனா பாதிப்பு 50 விழுக்காடு குறைந்துள்ளதாக சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்துள்ளார்.

Salem corona
Salem corona

By

Published : Oct 19, 2020, 6:21 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் நாள்தோறும் ஐந்தாயிரம் பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. அதேபோல் சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா நோய்த் தொற்று அதிகம் காணப்படும் பகுதிகளைக் கண்டறியப்பட்டு, அப்பகுதிவாசிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற மாவட்ட நடவடிக்கைகளால், நாள்தோறும் 300 முதல் 400 வரை இருந்த கரோனா எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 70 பேருக்கு மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சேலம் அரசு மருத்துவமனையில் இதுவரை 3 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. முன்பு 8 விழுக்காடாக இருந்த கரோனா தொற்று தற்போது 4 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதேபோல், 5 விழுக்காட்டில் இருந்து 1.4 ஆகக் குறைந்துள்ளது. கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது' என்றார்.

மேலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் செல்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அவ்வப்போது கைகளைக் கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.


இதையும் படிங்க:கரோனா பரவியதற்கு முகக்கவசம் அணியாததே காரணம் - தொற்றிலிருந்து குணமடைந்த 100 வயது முதியவரின் உறவினர்

ABOUT THE AUTHOR

...view details