தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணிமுத்தாறில் சாயப்பட்டறை கழிவுநீர் கலப்பு - விவசாயிகள் வேதனை - Bolluted Thirumanimuthaaru river

சேலம்: திருமணிமுத்தாறில் சாயப்பட்டறை கழிவுநீர் கலப்பதால் சுற்றுப்புறச் சுழல் மாசடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருமணிமுத்தாறில் கலக்கப்பட்ட கழிவுநீர்
திருமணிமுத்தாறில் கலக்கப்பட்ட கழிவுநீர்

By

Published : Jul 10, 2020, 12:22 AM IST

சேர்வராயன் மலையின் தெற்கில், ஏற்காடு அருகே திருமணிமுத்தாறு உருவாகிறது. இது சேலம் நகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 75 மைல்கள் ஓடி பரமத்திவேலூர் அருகே காவிரியில் கலக்கிறது.

மேலும், குகை வாய்க்கால், பஞ்சந்தாங்கி ஏரி வாய்க்கால், சக்கிலி ஏரி வாய்க்கால், மூக்கனேரி வாய்க்கால், தாதுபாய்க்குட்டை வாய்க்கால், நோட்டக்காரன் வாய்க்கால், வெள்ளக்குட்டை வாய்க்கால், சீலாவரி வாய்க்கால் என 8 வாய்க்கால்கள் உள்ளன.

இங்கு தற்போது அனுமதி இன்றி இயங்கி வரும் 50க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளின் கழிவு நீர் கலக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சேலம் மாநகரின் கழிவுநீர் முழுவதும் திருமணிமுத்தாற்றில் செல்லும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் திருமணிமுத்தாறு முழுவதுமாக மோசடைந்து கழிவுநீர் கால்வாயாக மாறி வருகிறது. உத்தமசோழபுரம், பூலாவரி, வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் இருக்கும் விவசாய நிலத்தில் நிலத்தடி நீர்மட்டம் விஷமாக மாறியுள்ளது. அந்தப் பகுதிகளில் விவசாயம் சரிவர செய்ய இயலாமல் விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால், அங்கிருந்து இடம்பெயர்ந்த சாயப்பட்டறைகள் சேலம் வருவதால் தொடர்ந்து நகரம் மாசடையும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அங்கிகாரம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு - தமிழ்நாடு அரசு


ABOUT THE AUTHOR

...view details