தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓமலூர் அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து - salem fire accident news

சேலம் : ஓமலூர் அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

omalur fire accident
omalur fire accident

By

Published : May 17, 2020, 9:48 AM IST

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கமலாபுரம் காட்டூர் பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி (50). இவரது வெல்லம் தயாரிக்கும் ஆலையில் நேற்று மதியம் திடீரென மின்கசிவு காரணமாகக் கரும்பு சக்கையில் தீப்பிடித்தது.

இதைத்தொடர்ந்து, ஓமலூர் காடையாம்பட்டி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலை அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள், பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

பஸ்பமான கரும்பு சக்கைகள்

நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து ஓமலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க :சீனாவைக் கட்டம் கட்டும் அமெரிக்கா - 18 புள்ளி செயல்திட்டம் ரெடி!

ABOUT THE AUTHOR

...view details