எட்டு வழிச் சாலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், விரைந்து முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இதற்கு ஆதரவாக தமிழ்நாடு அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதைக் கண்டித்து சேலம் பாரப்பட்டி, குப்பனூர் ஆகிய இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விவசாய நிலங்களில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மூன்றாவது நாளான இன்றும் (ஜூன் 6) சேலம் நாழிக்கல்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.