சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள அரசிராமணி ஒடசகரை பகுதியைச் சேர்ந்தவர் மணி. விவசாயியான இவர், இயற்கை முறையில் சிவன் சம்பா என்னும் பாரம்பரிய நெல் சாகுபடி செய்துள்ளார்.
இதையடுத்து , இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சார்பில் மாநில அளவில் விவசாயிகளுக்கான நெல் சாகுபடி போட்டிக்கு அவரை வேளாண் துறை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். விவசாயி மணி ஒரு ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையிலும், ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பயிரிடப்பட்ட சிவன் சம்பா என்னும் நெல் சாகுபடியும் செய்து வருகிறார்.