தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வா தலைவா வா' தலைவனை அழைக்கும் தொண்டர்கள் - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

By

Published : Nov 6, 2020, 8:03 PM IST

கடந்த ஒரு வாரமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் பல்வேறு மாவட்டங்களில் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

சேலம் மாநகரில் உள்ள பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் நான்கு சாலை உள்ளிட்ட பகுதிகளில் 'வா தலைவா வா' என நடிகர் ரஜனிகாந்தை அழைக்கும் விதமாக அவரது தொண்டர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

சுவரொட்டியில், "2021 இல் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த 'வா தலைவா வா', ஓட்டுனுபோட்டா ரஜினிக்குத்தான்" என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் சுவரொட்டியின் கீழே சேலம் மாவட்ட பொது மக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள் அவர்களின் பெயரில் போஸ்டர்கள் அச்சடிக்காமல் சேலம் மாவட்ட பொதுமக்கள் என அச்சடித்து ஒட்டியுள்ளதால் முழுவிபரம் தெரியவில்லை. இருப்பினும் சுவரொட்டிகள் குறித்து சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் சிலரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் பதில் அளிக்கவில்லை‌.

இந்த சுவரொட்டிகளை பொதுமக்கள் பலரும் பார்த்து செல்கின்றனர்.

இதையும் படிங்க: துரையை கலக்கும் ரஜினி ரசிகர்களின் அரசியல் சுவரொட்டிகள் - 'முடிவு சொல் தலைவா!'

ABOUT THE AUTHOR

...view details