சேலம் மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சேலம் மணிபால் மருத்துவமனை இணைந்து 'மின்னணு கழிவுகள் இல்லாத சேலம் உருவாக்க வேண்டும்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தியது. இந்த மாரத்தான் ஓட்டம் இன்று காலை சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
அதைச் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில், 12 முதல் 14 வயதுக்குள்பட்டவர்கள் கலந்துகொண்டனர். காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் ராமகிருஷ்ணா சாலை, காந்தி சாலை 4 சாலை, அண்ணா பூங்கா வழியே மீண்டும் காந்தி விளையாட்டு மைதானத்தை அடைந்தது.