சேலம் ஐந்து ரோடுப் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாற்று நூலான 'திராவிட இயக்கத்தில் என் பயணம்' என்ற நூலை வெளியிட்டார்.
தொடர்ந்து விழாவில் பேசிய ஸ்டாலின், 'திராவிட இயக்கத்தில் என் பயணம் என்ற நூலை வெளியிடக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெருமை அளிக்கிறது. வீரபாண்டி ஆறுமுகத்தைத் தவிர வேறு யாராலும் திராவிட கழகத்தின் வரலாற்றை எழுத முடியாது. இந்த நாட்டில் எதை எதை விவாதிப்பது என்ற விவஸ்தையே கிடையாது. ஆகையால்தான், நான் மிசாவில் கைது செய்யப்பட்டேனா? இல்லையா? என்று விவாதிக்கிறார்கள்.' என்று பேசினார்.
குடும்ப அரசியல் செய்யவில்லை:
திமுகவில் உள்ளவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்று பலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், திமுகவில் உள்ளவர்கள் குடும்ப அரசியல் செய்யவில்லை. திமுகவிற்காக குடும்பம் குடும்பமாக உழைக்கிறார்கள் எனவும், தமிழ்நாட்டில் மாநில உரிமைகளைப் பறிக்கும் அதிமுக ஆட்சியை விரட்டும் வரை, திமுகவின் போராட்டங்கள் தொடரும் என்றும் ஸ்டாலின் உரையாற்றினார்.
குடும்ப அரசியல் குறித்து ஸ்டாலின் விளக்கம் இந்த நிகழ்ச்சியில், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன்கள் ராஜா, பிரபு, மக்களவை உறுப்பினர் பார்த்திபன், முன்னாள் அமைச்சர்கள் காந்திசெல்வன், சுப்புலட்சுமி ஜெகதீசன், செல்வகணபதி உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் உதயநிதி...!