தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டி-மார்ட் வணிக வளாகத்திற்கு ரூ.5,000 அபராதம்

சேலம்: கரோனா விதிமுறைகளை பின்பற்றாத டி-மார்ட் வணிக வளாகத்திற்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

டி-மார்ட் வணிக வளாகத்திற்கு ரூ.5,000 அபராதம்
டி-மார்ட் வணிக வளாகத்திற்கு ரூ.5,000 அபராதம்

By

Published : Apr 11, 2021, 10:27 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகள் நேற்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வந்தன. அதன்படி உணவுக் கடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. குறிப்பாக வணிக வளாகங்கள், திரையரங்குகள் 50 சதவீத அளவுக்கு மட்டுமே வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், பேருந்துகளில் நின்று செல்ல அனுமதியில்லை என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து தமிழ்நாடு அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என்பதை அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், சேலத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்களில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என அம்மாவட்ட மாநகராட்சி ஆணையருக்குப் புகார்கள் வந்தன.

டி-மார்ட் வணிக வளாகத்திற்கு ரூ.5,000 அபராதம்

இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த இரண்டு நாள்களாகச் சேலத்தில் மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்களில் அபராதம் விதிக்கும் பணியை மாநகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். அதன்படி ஐந்து ரோடு பகுதியில் உள்ள டி-மார்ட் வணிக வளாகத்தில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அந்த வணிக வளாகத்திற்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:சேலம் மக்கள் நீதி மன்றத்தில் 3,200 வழக்குகள் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details