தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் மழைநீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம் - மழைநீர் வெளியேற்ற மக்கள் போராட்டம்

சேலத்தில் மழை நீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழைநீரை வெளியேற்ற கோரி சேலத்தில் கைக்குழந்தைகளுடன் பொதுமக்கள் போராட்டம்
மழைநீரை வெளியேற்ற கோரி சேலத்தில் கைக்குழந்தைகளுடன் பொதுமக்கள் போராட்டம்

By

Published : Nov 23, 2021, 7:42 PM IST

சேலம்: சேலத்தில் பெய்த தொடர் மழையால் வீடுகள், சாலைகளில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சிவதாபுரம் ஆண்டிபட்டி பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் இன்று (நவ.23) போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் கைக்குழந்தைகளுடன் வெள்ள நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மழை குறைந்து 10 நாட்கள் ஆகியும் நீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினர். மேலும் மழை நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மழைநீரை வெளியேற்ற கோரி சேலத்தில் கைக்குழந்தைகளுடன் பொதுமக்கள் போராட்டம்

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியில் செல்ல முடியவில்லை என தெரிவித்த அவர்கள் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: "சந்தை வாய்ப்பு" மற்றும் "தேவை" - பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் முக்கியக் காரணிகள்

ABOUT THE AUTHOR

...view details