மகளிரின் விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் இன்று கல்வியியல் கல்லூரி மாணவிகளுக்கு மாவட்டளவிலான விளையாட்டுப் போட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், 800 மீட்டர் தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.