சேலம் மாவட்ட எல்லை பகுதிகளில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சேலம் மாவட்டத்திற்குள் வருபவர்களை கண்காணித்து பரிசோதனை செய்வதற்காக சேலம் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச் சாவடிகளை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் உத்தரவுப்படி ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்களை சுகாதாரத் துறை, காவல் துறையின் மூலம் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம்.
ஆய்வு செய்த ஆட்சியர் ராமன் மாவட்ட எல்லைக்குள் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அனுமதி பெறாத வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்படுகின்றன. அவ்வாறு வரும் வாகனங்களின் ஓட்டுநர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.
மேலும், அவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்றுள்ள பகுதிகளில் இருந்து வரும் நபர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் குறித்த விவரங்களை உடனடியாக மாவட்ட நிரவாகத்திற்கும், சுகாதாரத் துறைக்கும் தெரிவிப்பதோடு அவர்களை தனிமைப்படுத்தி உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய உமிழ்நீர்ச் சோதனையைும் செய்யப்படுகிறது என்றார்.
இதையும் படிங்க:மதுபோதை தகராறு கொலை இனக்கலவரமாக மாறிய விபரீதம்