தமிழ்நாடு

tamil nadu

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கிய சேலம் ஆட்சியர்

By

Published : Feb 20, 2020, 3:12 PM IST

சேலம்: மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் சென்று வழங்கினார்.

Salem
Salem

தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவர்களும் மற்ற குழந்தைகளைப் போல சமுதாயத்தில் வாழ வேண்டும் எனப் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான உதவிகள், உபகரணங்கள் ஆகியவை ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகின்றன.

அதன்படி 2019-2020ஆம் ஆண்டிற்கான கல்வித் திட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான உதவி உபகரணம் வழங்கும் விழாவானது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள்

இந்த முகாமில் 804 குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டையும் 411 குழந்தைகளுக்கு 11 லட்சத்து 17 ஆயிரத்து 432 ரூபாய் மதிப்பீட்டில் வீல்சேர், ரோலர் சேர் உள்ளிட்ட உபகரணங்களையும் மாவட்ட ஆட்சியர் ராமன் வழங்கினார்.

இதையும் படிங்க:இந்தியன் 2' படப்பிடிப்புத்தள விபத்தில் இறந்தவர்களுக்கு கமல் இரங்கல்

TAGGED:

salem news

ABOUT THE AUTHOR

...view details