தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9-ஆம் வகுப்பு மாணவன் கூட மதுபோதையிலே வருகிறான்: சேலம் ஆட்சியர் வேதனை

9ஆம் வகுப்பு மாணவன்கூட மதுபோதையில் பள்ளிக்கு வருகிறான் எனவும், சமூகம் எவ்வளவு சீரழிய வேண்டுமோ அவ்வளவு சீரழிந்து விட்டது என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

9ஆம் வகுப்பு மாணவன்கூட மதுபோதையிலே வருகிறான்.. சேலம் ஆட்சியர் வேதனை!
9ஆம் வகுப்பு மாணவன்கூட மதுபோதையிலே வருகிறான்.. சேலம் ஆட்சியர் வேதனை!

By

Published : Feb 2, 2023, 9:15 AM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பேச்சு

சேலம்:அழகாபுரத்தில் உள்ள கூட்டுறவு துறை மண்டபத்தில், மாவட்ட ஊரகப்பகுதிகளில் விளையாட்டுப் போட்டி நடத்துவது தொடர்பான அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை நேற்று (பிப்.1) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தற்போது 4 இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் மது குடிப்பதும், மேலும் அவ்வழியே செல்லும் பெண்களை வழி மறித்து காதல் தொல்லை கொடுப்பதும், அவர்களை கொலை செய்வதுமான சம்பவங்கள் நடக்கின்றன.

சமூகம் எவ்வளவு சீரழிய வேண்டுமோ, அவ்வளவு சீரழிந்து விட்டது. இதே நிலைமை தொடர்ந்தால், நாம் வீதிகளில் நடமாட முடியாத சூழல் உருவாகும். ஒவ்வொரு பகுதியிலும் 2 பிரிவுகளாக இளைஞர்கள் பிரிந்து, இந்த சாதி அந்த சாதி என்று 2 குழுக்களாக உருவாகியுள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் சேலம் மாவட்டம் முழுவதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் 376 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறைக்குச் செல்லும் இளைஞர்கள், அங்கு 100க்கும் மேற்பட்ட குற்றங்களை கற்றுக் கொண்டு வெளியே வருகின்றனர். அது மட்டுமல்லாமல் திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்புணர்வு, கொலை உள்ளிட்ட குற்றங்களை கணக்கீடு செய்தால் 1,000க்கும் மேல் தாண்டும் நிலை உள்ளது.

இதனால் குற்றவாளிகள் நிறைந்த சமூகமாக மாறி வருகிறது. இளைஞர்களும், ஆண்களும் திசை மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு திசை மாறிச் சென்றால், மீள்வது மிகக் கடினம். தற்போது பள்ளிகளில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பயந்து கொண்டே பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

9வது பயிலும் மாணவன் கூட மது போதையில் பள்ளிகளுக்கு வருவதும், கஞ்சா போதையில் வருவதும் நடக்கிறது. ஆசிரியர்கள் பயத்துடனே பள்ளிக்கு வருகின்றனர். இதுபோன்ற சூழலில் இளைய சமுதாயத்தினரை நல்வழிப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க:காதலிப்பதாக கூறி 17 வயது சிறுவன் கடத்தல்.. போக்சோவில் 33 வயது பெண் கைது..

ABOUT THE AUTHOR

...view details