தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி ஆற்றின் அருகில் செல்ஃபி எடுக்கத் தடை - சேலம் மாவட்ட ஆட்சியர் - Salem District Collector Karmegam warned

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் தண்ணீரில் இறங்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி ஆற்றில் வேடிக்கை பார்க்க, செல்ஃபி எடுக்க தடை... சேலம் மாவட்ட ஆட்சியர் பேட்டி!
காவிரி ஆற்றில் வேடிக்கை பார்க்க, செல்ஃபி எடுக்க தடை... சேலம் மாவட்ட ஆட்சியர் பேட்டி!

By

Published : Sep 6, 2022, 4:16 PM IST

சேலம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது, ' மேட்டூர் அணைக்கு வருகின்ற நீர்வரத்துக்கு ஏற்றதுபோல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய தாலுகாக்களில் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல் துறை ஆகியோர் இணைந்து தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, உணவுப்பொருட்கள் வழங்கி கண்காணிக்க நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடும் நிலையில் செல்ஃபி எடுக்க முயற்சிப்பது, தண்ணீரில் இறங்குவது உள்ளிட்ட முயற்சியில் ஈடுபட வேண்டாம்' என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி ஆற்றின் அருகில் செல்ஃபி எடுக்கத் தடை - சேலம் மாவட்ட ஆட்சியர்

இதன்மூலம் தூரத்திலிருந்து காவிரி ஆற்றைப்பார்க்கலாம்; யாரும் காவிரி ஆற்றில் இறங்க கூடாது என்பது புலனாகிறது.

இதையும் படிங்க:6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details