இது குறித்து சேலம் மண்டல தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், "மத்திய அரசு, மாநில உரிமைக்கு எதிராக செயல்பட்டுவருகிறது. மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியை தமிழர்களின் மீது திணித்து பன்முகத்தன்மையை சீரழிக்கிறது. இருமொழிக் கொள்கையை கடைப்பிடித்துவரும் தமிழ் மாநில உரிமைக்கு எதிராக மும்மொழிக் கொள்கையை திணிக்க தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
இந்தி திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் - diravidar kazagam
சேலம்: இந்தி திணிப்பை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டம்
இதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தியாவின் பன்முகத் தன்மையை சீரழிக்கும், விரோத நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இன்று மாநில அளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம், பெரும் போராட்டமாக மாறி மத்திய அரசை அடிபணியவைக்கும்" என்றார்.