திருப்பதி திருமலையில் ஸ்ரீவாரி வைகுண்ட ஏகாதசி வைபவம் வெகு விமரிசையாக வருகின்ற திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்த விழாவையொட்டி ஏழுமலையான திருக்கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் மலர்களை மாலையாக தெடுத்து வழங்குவர்.
அதன் ஒரு பகுதியாக சேலத்திலுள்ள தனியார் மண்டபத்தில், ஸ்ரீ பக்திசாரர் சபா சார்பில் மலர்கள் தொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் விரதம் இருந்து 4 டன் அளவிலான மஞ்சள் சிவப்பு சாமந்தி மலர்களை திருப்பதி ஏழுமலையானுக்காக மாலைகளாக கோர்த்தனர்.