சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சையது உசேன். இவர் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு தொடர்ந்து காய்ச்சல், இருமல் பாதிப்பு இருந்துள்ளது. இதனையடுத்து பெங்களூருவிலிருந்து சேலம் வந்த சையது உசேன் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
பின்னர் அங்கு சிகிச்சைப் பலன் அளிக்கவில்லை என்பதை அறிந்த அவரின் பெற்றோர்கள் சையது உசேனை, சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சையது உசேனுக்கு வைரஸ் தொற்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதனை அறிந்த சிலர் சையது உசேனுக்கு கொரோனா வைரஸ் என சமூகவலைதளத்தில் தகவல்களைப் பரப்பினர்.