சேலம்: இரும்பு ஆலையை அடுத்த எஸ்.கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருபவர், கந்தசாமி. இந்த நிலையில், இவரது பட்டாசு கிடங்கில் கோயில் திருவிழாவிற்காக ஆர்டர் பெற்று நாட்டு வெடி தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தன. இதனிடையே, நேற்று முன்தினம் (ஜூன் 1) பட்டாசு கிடங்கில் கோயில் திருவிழாவிற்காக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில், கடைக்குள் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. மேலும், கடை முழுவதுமாக வெடித்து தரைமட்டமாகியது. இதனால், பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு, தீயை அணைத்தனர். இதில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலம் வெடி விபத்து: முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு.. ஈபிஎஸ் கோரிக்கை