சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி அருள்ஜோதி. இவர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள கவுண்டனூர் மயானம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு இறந்து கிடந்தார்.
ரவுடி கொலை வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரண் - accused surrender
சேலம்: குமாரபாளையம் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 6 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

குற்றவாளிகள்
இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின், வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஆறு பேர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.