சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை பகுதியில் மனிதக் கழிவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயு மூலம் செயல்படும் சமையல் கூடத்தை மாநகராட்சி ஆணையர் சதீஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் எருமாபாளையம் மெயின் ரோடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தையும் பார்வையிட்டார்.
மனிதக் கழிவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயு சமையல் கூடம் ஆய்வு - Gas cooking produced from human waste
சேலம்: மனிதக் கழிவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயு மூலம் செயல்படும் சமையல் கூடத்தை மாநகராட்சி ஆணையர் சதீஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
![மனிதக் கழிவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயு சமையல் கூடம் ஆய்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5155216-thumbnail-3x2-slm.jpg)
சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் ஆய்வு
இதுகுறித்து அவர் கூறுகையில், 'மனிதக் கழிவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயு மூலம் செயல்படும் சமையல் கூடத்தை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த சமையல் கூடத்தில் சமைக்கின்ற வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் ஆய்வு