மாநகராட்சி ஆணையாளருக்கு கரோனா! - மாநகராட்சி ஆணையருக்கு கரோனா
சேலம்: மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலத்தில் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாள்தோறும் நோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 300யை கடந்து தற்போது, சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டோரின் எண்ணிக்கை, 16 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த நிலையில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் குமார், அலுவலகம் பணியின் காரணமாக கடந்த வாரம் சென்னை சென்றிருந்தார்.
பணி முடிந்து திரும்பிய நிலையில் அவருக்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கரோனா நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
உடனடியாக அவர் சேலத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மாநகராட்சி ஆணையாளருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் மாநகராட்சி பணியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து, சதீஷூடன் கடந்த இரண்டு நாட்களாக, தொடர்பில் இருந்த நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
மாநகராட்சி ஆணையாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ஊழியர்கள், அலுவலர்கள் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தி உள்ளது.