தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் ஒரே நாளில் 326 பேருக்கு கரோனா; 9 பேர் உயிரிழப்பு - சேலத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

சேலம்: மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 6) ஒரே நாளில் 326 பேருக்கு கரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Oct 6, 2020, 7:59 PM IST

Updated : Oct 6, 2020, 8:08 PM IST

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சேலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று (அக்டோபர் 6) மட்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சேலம் மாவட்டத்தில் 326 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் 188, எடப்பாடி 15, வீரபாண்டி 6, ஓமலூர் 9, சங்ககிரி 17, மேட்டூர் நகராட்சி 3, கொளத்தூர் 1, மேச்சேரி 5, நங்கவள்ளி 2, காடையம்பட்டி 2, தாரமங்கலம் 6, மகுடஞ்சாவடி 8, ஆத்தூர் 6, ஆத்தூர் நகராட்சி , பனமரத்துப்பட்டி 5, வாழப்பாடி 6, கெங்கவல்லி 4, பெத்தநாயக்கன்பாளையம் 5, தலைவாசல் 4, அயோத்தியாப்பட்டணம் 4 என மாவட்டத்தைச் சேர்ந்த 306 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. பிற மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து தொற்று ஏற்பட்ட அனைவரும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுவரையில் சேலம் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 716 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 18 ஆயிரத்து 755 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 604 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 357 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Last Updated : Oct 6, 2020, 8:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details