உலகையே உலுக்கும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைப்பிடிக்க காவல் துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு ஆரோக்கியத் திட்டத்தின் கீழ், வைட்டமின் மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, சேலம் மாநகர காவலர்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகளை, சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில் இன்று வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர், 'ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து சேலத்தில் கட்டுப்பாடுகளை மீறும் குற்றச் சம்பவங்கள் பெரும்பாலும் குறைந்து விட்டன' எனத் தெரிவித்தார்.