தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்ப பிரச்னையால் தொழிலாளி தற்கொலை.! - சேலம் தற்போதைய குற்றச் செய்திகள்

சேலம்: கன்னங்குறிச்சியில் குடும்ப பிரச்னையில் கட்டடத் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்தார். அவர் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

construction labour
கட்டடத் தொழிலாளி

By

Published : Dec 18, 2019, 8:44 PM IST

Updated : Dec 18, 2019, 9:12 PM IST

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 31). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி ரம்யாவும் பத்து வயதில் மகளும் உள்ளனர். சக்திவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், தினமும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது .

கடந்த திங்கள்கிழமை (16/12/19) அவர்கள் இருவருக்கும் நடந்த பிரச்னையில் ரம்யா கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து சக்திவேல் நேற்று மாலை ரம்யாவிடம் சென்று, தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரம்யா வர மறுத்ததால் அவர் தனியாக வீடு திரும்பினார்.

இந்நிலையில் இன்று காலை சக்திவேல் வீட்டில் தூக்கில் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உறவினர்கள், கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் சக்திவேலின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்துக்கொண்ட கட்டடத் தொழிலாளி

சக்திவேல் இறந்ததை அறிந்த உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். சக்திவேலின் உடல் முழுவதும் கீறல்கள் உள்ளது. அவரை அடித்து கொன்று சடலமாக தொங்க விட்டார்களா? என்று சந்தேகம் எழுவதாக கூறிய அவர்கள் காவல்துறையினர் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படியுங்க:

தற்கொலை வழக்கில் திருப்பம்; ஊர்மக்கள் அடித்துக் கொன்றதாக மனைவி புகார்... காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Last Updated : Dec 18, 2019, 9:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details