தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம்! - special camp by police at salem

சேலம்: மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

op
opcop

By

Published : Nov 22, 2020, 6:47 PM IST

சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் சேலம் மாநகர காவல்துறை சார்பில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசிய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார், "மாவட்டத்தில் இதுவரை 386 பேர் காணாமல் போயுள்ளனர்.இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சேலம் மாநகரில் காணாமல் போன 176 பேரை கண்டறியும் சிறப்பு முகாம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.அதே போல், இன்றும் முகாம் நடைபெறுகிறது. காணாமல் போனவர்கள் குறித்து அந்தந்த காவல் நிலையங்களில் புகாரளித்த உறவினர்கள் இங்கும் கலந்து கொண்டு உள்ளனர்.அவர்களுக்கு காணாமல் போனவர்கள் அல்லது மாயமாகி இறந்தவர்களின் புகைப்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டது" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details