மருந்தாளுநர் தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள தனியார் பார்மஸி கல்லூரியில் இன்று காலை மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது.
மருந்தாளுனர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் பேரணி! - Pharmacist day awarness
சேலம்: ஏற்காடு அருகே மருந்தாளுநர் தினத்தையொட்டி, மருந்துகள் மக்கள் கையாள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
college-students-rallied
இதனையொட்டி பார்மசி கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இவர்கள் கல்லூரி அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு கோரிமேடு வரை நடந்துசென்றனர். விழிப்புணர்வு பதாகைகளை பிடித்து சென்ற இவர்கள் கோஷமிட்டும் சென்றனர். அதில் தரமான மாத்திரையை வாங்கி உட்கொள்ள வேண்டும். மருத்துவர்களின் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கி சாப்பிடக் கூடாது என்பதை வலியுறுத்தினர்.