ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உலகுக்கே அச்சுறுத்தலாக இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளபோதிலும், வணிகர்களும், மக்களும் அதற்குப் போதிய ஒத்துழைப்பு தராததால், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மையை மேம்படுத்துவதே இதற்கு ஒரே வழி என்று உணர்ந்த சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி, பிளாஸ்டிக் கழிவுகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடிவுசெய்தது.
கழிவுகளாக எறியப்படும் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்டவற்றை தூள் தூளாக்குகின்றனர். அவற்றை கூழ் போல செய்து மீண்டும் அவற்றிலிருந்து மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வடிவமைத்து அசத்துகின்றனர். சுற்றுப்புற சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் தாங்கள் வெற்றிபெற்றிருப்பதாக பெருமை தெரிவிக்கின்றனர் இக்கல்லூரி பேராசிரியர்கள்.
பிளாஸ்டிக் மேலாண்மையில் அசத்தும் கல்லூரி பிளாஸ்டிக் பிரிக்ஸ் தயாரிக்க சிமெண்ட், மணல் ஆகியவை மிகக் குறைந்த அளவே போதுமானது என்பதால், இதனை குறைந்த விலைக்கு கொடுக்க முடியும். குறைந்த பட்ஜெட்டில் வீடுகள் கட்டும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதையும் படிக்க: பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை பொருட்கள் செய்து அசத்தும் பெண்கள்!