தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

படைப்புளுவை கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்புமுறை: சேலம் ஆட்சியர் ஆய்வு

சேலம் : ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு முறை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார்.

Attur agriculture lands

By

Published : Nov 2, 2019, 9:23 AM IST

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி கிராமத்தில் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் மக்காச்சோளப் பயிரில் படைப்புளு அதிகளவில் தாக்கி மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்திவருகிறது.

அதனால் படைப்புளுவை கட்டுப்படுத்த ஒருமித்த பூச்சிக்கொல்லி மருந்துக்கு முதல்கட்டமாக ஹெக்டேருக்கு 1500 ரூபாய், மருந்து தெளிப்பதற்கு ஹெக்டேருக்கு 500 ரூபாய், இரண்டாம் கட்டமாக பூச்சிக்கொல்லி மருந்துக்கு 3000 ரூபாய், தெளிப்பதற்கு 500 ரூபாய் என தமிழ்நாடு அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கி படைப்புளுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. படைப்புளுவை கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு 3.14 கோடி அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ராமன்

படைப்புளுவைக் கட்டுப்படுத்தும் இந்தத் திட்டத்தை, ஆத்தூர் அருகே மஞ்சினியில் உள்ள விவசாய நிலங்களில் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்தார். மேலும் விவசாய நிலங்கள், வீட்டுப் பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூடி மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றவும் உத்தரவிட்டார். அங்குள்ள அரசு கால்நடை மருத்துமனை, அரசு துணை சுகாதார நிலையம், வீட்டுப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளையும் ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க:

மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலைப் பெற கேரளா செல்லும் அவரது தங்கை!

ABOUT THE AUTHOR

...view details