தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக பேனரில் ஆட்சியர் ரோகிணி புகைப்படம்! - பாஜகவினர் பேனர்

சேலம்: மாவட்ட ஆட்சியர் ரோகிணிக்கு பாஜகவினர் பேனர் வைத்ததால், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

collector

By

Published : Mar 5, 2019, 7:03 PM IST

சேலம் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் பாரத பிரதமருக்கும், பாஜக அரசுக்கும் வாழ்த்து தெரிவித்து பேனர் வடிவமைத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வைத்திருந்தனர். இந்தப் பேனரில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததால், அவ்வழியேச் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வியப்புடன் அதனை பார்த்துச் சென்றனர்.

இந்த தகவல் அறிந்த அரசுத் துறை அலுவலர்கள், சேலம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பேனரை அமைத்த பாஜகவினரை உடனடியாக பேனரை அகற்றும்படி எச்சரித்தனர். அதனையடுத்து அந்த பேனரானது அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும், பேனர் அமைத்த இளைஞர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details