தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தாம்பட்டி ஏரியை ஆய்வு செய்த ஆட்சியர்!

சேலம்: கனமழை காரணமாக சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பிய நிலையில், தண்ணீரை வெளியேற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சேலம்
சேலம்

By

Published : Sep 12, 2020, 7:33 PM IST

சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிவதாபுரம் பகுதியில், 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது.

தொடர்ந்து ஏரியிலிருந்து வெளியேறிய மழைநீர் சிவதாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து சேலம் - இளம்பிள்ளை சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வந்தனர். மேலும் இந்த நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் இன்று (செப்.12) மாலை திடீரென சேலத்தாம்பட்டி ஏரி பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் கொண்டுச் சொல்லப்பட்டு, சிவதாபுரம் பிரதான சாலையில் குழி வெட்டி அதன் வழியே ஏரி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இந்த ஆய்வின்போது, சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், வருவாய் கோட்டாட்சியர் மாறன், மாநகர காவல் துணை ஆணையர் சந்திரசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details