தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் பணப்பட்டுவாடா நடக்கிறதா -தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை! - salem latest news

சேலம்: பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பணியில் உளவுத்துறை அலுவலர்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார்.

salem-collector-raman-press-meet
salem-collector-raman-press-meet

By

Published : Apr 3, 2021, 10:20 PM IST

சேலத்தில் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பணியில் உளவுத்துறை அலுவலர்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ.ராமன் கூறுகையில், "தமிழ்நாடு சட்டபேரவை பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டபேரவை பொதுத் தேர்தல் 2021க்கான தேர்தல் பரப்புரைகளை தேர்தல் வாக்குப்பதிவிற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக முடித்துக்கொள்ள வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டபேரவை தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரைகளை நாளை (ஏப்.4) ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்குள் முடித்திட வேண்டும். ஒலிப் பெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது. அந்தந்த தொகுதி வாக்காளர்களைத் தவிர, மற்ற நபர்கள், வெளி ஆள்கள் யாரும் தொகுதிக்குள் இருக்கக் கூடாது. திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் போன்றவற்றிலும் வெளி நபர்கள் யாரையும் தங்க வைக்கக்கூடாது. அந்தந்த தொகுதி வாக்காளர்களைத் தவிர வெளி நபர்கள் உடனடியாக வெளியில் சென்றுவிட வேண்டும்.

வேட்பாளர்கள், சமுதாய கூடங்கள், விருந்தினர் மாளிகைகள், தர்ம சத்திரங்கள் முதலான இடங்களை வாக்காளர்களின் வாக்கு சேகரிக்கும் விதமாக பயன்படுத்தக் கூடாது. தேர்தல் தொடர்பான பரப்புரைகள், பயணங்கள் ஆகியவற்றிற்கு வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, ஒமலூர், எடப்பாடி, கெங்கவல்லி, ஏற்காடு, ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர் ஆகிய 11 சட்டபேரவை தொகுதிகளிலும் மொத்தம் 99 பறக்கும் படைகள், 108 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 11 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய 2 சட்டபேரவை தொகுதிகளுக்கும் கூடுதலாக 2 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும் என மொத்தம் 13 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து 24 மணி நேரமும் (24 / 7) கண்காணிப்பு பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விதிமுறைகளுக்கு புறம்பான நடவடிக்கைகளை தடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்களின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்களின் தீவிரப்படுத்தப்பட்ட கண்காணிப்பிற்காக மத்திய ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பணப்பட்டுவாடா தொடர்பான புகார் கிடைத்தவுடன் ஒரு சில நிமிடங்களில் பறக்கும் படை குழுக்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று துரித நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக உரிய அறிவுரைகள் அக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடா தொடர்பான முக்கியமான தகவல்கள் பெறும் விதமாக புலனாய்வுத் துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குக்கு பணம் வாங்குவதும், பணம் கொடுப்பதும் சட்டப் படி தண்டனைக்குரியது என அரசியல் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கான விலைமதிப்பற்ற வாக்கினை செலுத்தி தங்களது ஜனநாயக கடமையினை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: இளநீரை சீவி வாக்கு சேகரித்த ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details